ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் எரிந்து கொண்டிருந்த நிலையில் இளம் பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்து எரிக்கப்பட்ட இளம் பெண்ணின் உடலை எரிந்து கொண்டிருந்த நிலையில் போலீசார் இன்று கைப்பற்றினர். விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது கொத்தப்பள்ளி கிராமம். நரவ செல்லும் வழியில் சாலை ஓரத்தில் இளம் பெண்ணின் உடல் இன்று அதிகாலை எரிந்து கொண்டிருந்தது.