பாடல் பெற்ற தலமான திருவாலங்காடு சிவன் கோவிலில் ஸ்தல விருட்ச மரம் திடீரென பறிந்த எரிந்ததால் இன்று கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர். இக்கோவிலின் ஸ்தல விருட்சமான ஆலமரம் நேற்று பற்றி எரிந்தது.
பக்தர்கள் நெய் தீபம், கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டபோதுதான் இந்த தீவிபத்து நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் திருவாலங்காடு சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.