தமிழகத்தில் பூச்சி மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை என்று கால் நடைபராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
ஈரோட்டில் தமிழக கால்நடை பராமரிப்பு துறை சார்பில் புதிய கிளை மருத்துவமனை திறப்புவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்று சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கால் நடைபராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பணிகளை துவக்கி வைத்தனர் அப்பொழுது பேசிய கால்நடைதுறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் கால்நடைபராமரிப்பு துறை சார்பில் இதுவரை 8 லட்சத்து 85 ஆயிரம் விலையில்லா ஆடுகளும் 78 ஆயிரம் கறவை மாடுகளையும்வழங்கபட்டுள்ளது இந்த ஆண்டு 1 ½ லட்சம் கறவை மாடுகள் வழங்க திட்டமிடபட்டுள்ளதாகவும் தெரிவத்தார் தமிழகத்தில் பூச்சி மந்து தட்டுபாடு ஏதும் இல்லை என்றும் யாரையும் யாரும் தவறாக பேச கூடாது என்றும்தெரிவித்ததர்