deS:சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி எதிராக மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிர்மலா தேவியை 5 நாட்கள் விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு சாத்தூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தினார் என்பது நிர்மலா தேவி மீதான புகார். மாணவிகளை மூளைச்சலவை செய்யும் ஆடியோ வெளியாகவே, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.