பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக படுத்தபடுக்கையாக உள்ள சேலம் கோவில் யானை ராஜேஸ்வரியை கருணைக்கொலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் பராமரிக்கப்படும் பெண் யானை ராஜேஸ்வரி நோய்வாய்ப்பட்டு எழுந்து நடமாட முடியாமல் உள்ளது. காலில் புண் ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்த ராஜேஸ்வர யானையை கோவில் நிர்வாகத்தினர் பொக்லைன் எந்திர உதவியுடன் எழுந்து நிற்க வைக்க முயற்சித்தனர். ஆனால் அந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை.