இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியில் பவுன்சர் பந்துக்கு நோபல் தராததால் கோவமான வங்கதேச அணியின் கேப்டன் சகிப் அல்ஹசன் வங்கதேச பட்ஸ்மான்களை பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேற சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா, இலங்கை மற்றும் வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்தியா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. வங்காளதேசம், இலங்கை அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற்ற கடைசி லீக்கில் வங்காளதேசம் - இலங்கை அணிகள் மோதின.
srilanka vs bangladesh t20 . bangladesh won by 2 wickets