மன்னார் வளைகுடா மீனவர்கள் கரை திரும்ப விமானம் மூலம் எச்சரிக்கை - வீடியோ

Filmibeat Tamil 2018-03-12

Views 692

மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என விமானம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கன்னியாகுமரி கடற்பகுதியில் பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Fishermen in the Mannar Gulf have been alerted by the plane. Fishermen have been warned by a Dornier plane.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS