நம்பர் 1 தமிழ் நடிகர் யார் தெரியுமா?- வீடியோ

Filmibeat Tamil 2018-03-09

Views 7

தனுஷ் கோலிவுட், பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் அடுத்து 'வடசென்னை' படம் வரவுள்ளது.
இப்படத்திற்காக தனுஷ் மிகவும் கடுமையாக உழைத்துள்ளார். இந்நிலையில் ட்விட்டரில் தனுஷ் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறார்.

தனுஷை ட்விட்டரில் தற்போது ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளது. தென்னிந்திய நடிகர்களில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட நடிகர் தனுஷ் தான். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என பன்முகக் கலைஞனாக திகழ்பவர் தனுஷ். தற்போது 'வடசென்னை', 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'மாரி 2' ஆகிய படங்களிலும் ஹாலிவுட்டில் 'த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' படத்திலும் நடித்து வருகிறார். இதனால் அவரை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போது அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளது. இதன்மூலம், ட்விட்டரில் தென்னிந்தியாவிலேயே அதிக ஃபாலோயர்களை கொண்ட நம்பர் 1 நடிகர் எனும் பெருமை தனுஷுக்கு கிடைத்துள்ளது. உலகம் முழுக்க ரசிகர்களைக் கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு 4.58 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர். உலகநாயகன் கமலுக்கு 4.31 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர். விஜய்க்கு 1.44 மில்லியன் ஃபாலோயர்ஸ் மட்டுமே உள்ளனர். அஜித்துக்கு ட்விட்டரில் அக்கவுன்டே இல்லை. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரையும் முந்தி முதலிடத்தில் இருக்கிறார் தனுஷ். பல துறைகளிலும் தனுஷின் வளர்ச்சியைப் பார்த்து, மற்ற நடிகர்களின் ரசிகர்களே வாயைப் பிளக்கிறார்கள் என்பதுதான் உண்மை.


Dhanush has reached a new milestone in Twitter. The number of followers for dhanush has crossed 7 million on Twitter.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS