துணை வேந்தரின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டதையடுத்து மீண்டும் சிறைக்கு சென்றார்.
கோவை பாரதியார் பல்கலை கழக துணை வேந்தராக பதவி வகித்தவர் கணபதி. கடந்தவாரம் உதவி பேராசிரியர் பணிக்கு லஞ்சம் பெற்ற போது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். துணை வேந்தருக்கு உதவிய பேராசிரியர் தர்மராஜீம் கைது செய்யப்பட்டார். இருவரும் ஜாமீன் கோரி கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது போலீஸ் தரப்பில் ஜாமீன் வழக்க கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இருவரிடன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
Des : The judge dismissed the vice-bail plea and ordered the jail again.