பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
எந்த வித முன் அறிவிப்பும் இன்றி திடிரென பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது . போக்குவரத்து துறை நஷ்டத்தினை சரி செய்ய இதை தவிர வழி இல்லை என்று மக்கள் தலையில் பாரத்தை வைத்து பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளதற்கு பல்வேறு அரசியல் அக்கட்சிகள் பொதுமக்கள் மாணவர்கள் கடும் கண்டம் தெரிவித்துள்ளனர் .குறிப்பாக கல்லுரி மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் பேருந்துகளை சிறைபிடித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் மேலும் கட்டண உயர்வை திரும்ப பெரும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர் .இதனால் கலக்கம் அடைந்த கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் போராட்டம் வலுக்கும் முன்பு தடுக்கும் விதமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .இதனிடயே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டை பல்கலை கழக மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களை போலிசார் கைது செய்தனர் போராட்டம் நடத்திய மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யாவிட்டால் ஜல்லிக்கட்டுக்கு மெரீனாவில் நடந்த போராட்டம் போல் கட்டண உயர்வு புரட்சி வெடிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
Des : The students are being hired in various districts in Tamil Nadu as students are protesting against bus fares