மதுரை, ஈரோடு, கும்பகோணம் பகுதிகளில் மாணவர்கள் போராட்டம்- வீடியோ

Oneindia Tamil 2018-01-30

Views 1

பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோடு, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்களின் போராட்டம் நீடிக்கிறது. மதுரையில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் 10 பேர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தியாகராஜர் கல்லூரி மாணவர்கள் 17 பேர் நேற்று தெப்பகுளம் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை முழுவதும் திரும்பப் பெற வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


Police remanded 10 students at Madurai prison those were protested agaisnt bus fare hike, in the meanwhile college students protests continuing at Kumbakonam and Erode.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS