எந்த போட்டியிலும் விளையாடாமல் ஐ.பி.எல். அணியில் இடம் புடித்த வீரர்- வீடியோ

Oneindia Tamil 2018-01-09

Views 8.2K

ஐபிஎல் அணியில் சேர்வது என்பது இந்திய அணியில் இடம்பிடிக்கும் அளவிற்கு மிகவும் முக்கியமான விஷயமாகும். ஐபிஎல் ஏலங்களில் கோடிகளில் பணம் புரளும். ஆனாலும் என்னதான் பணம் பெரிய விஷயமாக இருந்தாலும் ஒரு ஐபிஎல் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றால் கூட அடுத்த போட்டியில் காணாமல் போய் விடுவார்கள். ஆனால் கடைசி ஒருவருடமாக ஒரு போட்டி கூட விளையாடாமல் ஒருவர் ஐபிஎல் அணியில் இடம்பிடித்து இருக்கிறார். பீகாரை சேர்ந்த லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்.பி பப்பு யாதவ் மகன் சர்தாக் ரஞ்சன் இந்த சாதனையை செய்து உள்ளார். இந்த 'வீரர்' அணியில் சேர்க்கப்பட்டதற்கு பின் பெரிய கதையே இருக்கிறது.

பீகாரில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்காக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பப்பு யாதவ். தற்போது இவர் சொந்தமாக ஜன் அதிகார் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரஞ்ஜீத் ரன்ஜன் காங்கிரஸ் கட்சியில் எம்பியாக இருக்கிறார். இவர்களின் மகன் சர்தாக் ரஞ்சன் தற்போது டெல்லி ஐபிஎல் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இவர் சென்ற வருடம் முழுக்க ஒரு போட்டி கூட விளையாடவில்லை என்பதே இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனை ஆகும். அதற்கு முன்பு நடந்த முஸ்தபா அலி கோப்பைக்கு போட்டியில் 5,3, 2,10 என 'இமாலய' ரன்களை அடித்து இருக்கிறார்.

Bihar MP Pappu Yadav's son Sarthak Ranjan has selected for IPL without playing a match and a session. He got only 5,3, 2,10 runs in last year session also

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS