இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இருக்கும் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. தற்போது அங்கு மிகவும் அதிக அளவில் வெயில் அடித்து வருகிறது.
நேற்றைய போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. நேற்று ஒரு ஓவர் கூட வீசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மீண்டும் இன்று போட்டி நடக்கிறது. தென்னாப்பிரிக்க பவுலர் ஸ்டெய்ன் போட்டியில் இருந்து விலகிவிட்டது குறிப்பிடத்தக்கது.இதில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் அவர்களின் பேட்டிங் தொடக்கத்திலேயே சொதப்பியது. முதல் இன்னிங்ஸ் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 286 ரன்கள் எடுத்து இருக்கிறது. புவனேஸ்வர்குமார் அதிகபட்சமாக 4 விக்கெட் எடுத்தார். அஸ்வின் 2 விக்கெட் எடுத்தார். மற்ற பவுலர்கள் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஏ பி டிவில்லியர்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். அஸ்வின் குறைந்த ஓவர்களே வீசினார்.
இந்தியா அணியின் தென்னாப்பிரிக்காவை விட மோசமாக பேட்டிங் செய்தது. முரளி விஜய், தவான், கோஹ்லி, ரோகித் ஷர்மா, புஜாரா, அஸ்வின் என அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். கோஹ்லி வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். பாண்டியா 95 பந்துகளில் 14 பவுண்டரிகள், 1 சிக்சர் உதவியோடு 93 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்தியா 209 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
Indian team went South Africa for cricket tour. First test match between India and held in Newlands, Cape Town. Kohli back to the team again lead team as the captain. SA won the toss and choose to bat first. SA got 225 runs at the end of first day with 10 wickets. Ind got only 209. In second inning SA having 65 runs for 2 wicket.