இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி - இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Sathiyam TV 2018-07-17

Views 1

அயர்லாந்துடன் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி எளிதாக வென்றது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கோலி 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 6 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 36 பந்துகளில் 70 ரன்களை குவித்த ராகுல், கெவின் ஓ பிரையன் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வீழ்ந்தார். சிறப்பாக ஆடி வந்த சுரேஷ் ரெய்னா 3 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்தபோது ஓ பிரையன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 213 ரன்களை எடுத்தது. 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, 12 ஓவர் 3 பந்துகளில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 70 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் இந்திய தரப்பில் ஆட்ட நாயகனாக லோகேஷ் ராகுல் தேர்வு செய்யப்பட்டார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS