தமது அரசியல் வருகைக்கு உதவ வேண்டும் என சென்னையில் பத்திரிகையாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ள ரஜினிகாந்த் விரைவில் கட்சியின் பெயரை வெளியிட இருக்கிறார். இதனிடையே ரஜினிகாந்த் பேசிய ஆன்மீக அரசியல் பெரும் சர்ச்சையாகி உள்ளது. தமிழகத்தில் பாஜகவின் முகமாகத்தான் ரஜினி செயல்படுகிறார் என்கிற விமர்சனமும் முன்வைக்கப்பட்டு வருகிறது. அத்துடன் யாரையும் விமர்சிக்காமல், போராடாமல் ஆட்சியை பிடிப்போம் என்றெல்லாம் ரஜினிகாந்த் பேசியதும் சர்ச்சையாகிவிட்டது.
ஊடகங்களில் தற்போது விவாதப் பொருளாகி இருக்கும் ரஜினிகாந்த் இன்று சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்த் பேசியதாவது:
நானும் பத்திரிகையில் ப்ரூப் ரீடராக 2 மாதம் வேலை பார்த்திருக்கிறேன். எனது அரசியல் வருகைக்கு பத்திரிகையாளர்கள் உதவி தேவை. நான் தவறு ஏதேனும் செய்திருந்தால் நீங்கள் மன்னிக்க வேண்டும்.