ரஜினியின் முதல் அரசியல் மாநாடு சேலத்தில் தான் நடத்த வேண்டும் ரசிகர்கள் வேண்டுகோள்….வீடியோ

Oneindia Tamil 2018-01-05

Views 308



நடிகர் ரஜினிகாந்த் தனது முதல் அரசியல் மாநாட்டை சேலத்தில் நடத்த வேண்டும் என்று அம்மாவட்ட ரசிகர் மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியின் போது அரசியலில் ஈடுபடுவது குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் புதிதாக கட்சி துவங்கப்போவதாகவும் பொதுமக்களையும் தனது மன்றத்தில் இணைக்க வேண்டும் என்று ரசிகர் மன்றத்தினருக்கு வேண்டு கோள் விடுத்தார். அதையடுத்து சேலம் மாவட்ட ரசிகர் மன்றத்தினர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை மன்றத்தில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கிராம வாரியக சென்று அங்குள்ள மக்களை சந்தித்து தங்கள் மன்றத்தில் ஆன்லைன் மூலம் இணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளில் ஈடுபட்டுள்ள ரசிகர் மன்றத்தினர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சேலம் மாவட்டம் தான் அரசியலில் திருப்புமுனைகளை ஏற்படும் மாவட்டமாக திகழ்வதால் ரஜினியின் முதல் அரசியல் கூட்டம் இம்மாவட்டத்தில் தான் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Des : Actress Rajinikanth has requested her first political conference to be held in Salem.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS