ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி இன்று கடைசி நாளாக தனது ரசிகர்களை சந்தித்தார். ரஜினி ரசிகர்கள் பல நாட்களாக எதிர்பார்த்து கொண்டு இருந்த அறிவிப்பை ரஜினி வெளியிட்டுவிட்டார். வரும் சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சியுடன் போட்டியிடுவேன் என்று ரஜினி அறிவித்து இருக்கிறார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது. அவர் தன்னுடைய அரசியல் கொள்கை ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றுள்ளார். ரஜினியின் இந்த அரசியல் நிலைபாடு அரசியல்வாதிகளை குழப்பி இருக்கிறது.
தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்று ரஜினிகாந்த் அறிவித்து இருக்கிறார். இதன் காரணமாக அவருடைய அரசியல் நிலைபாடு எப்படி இருக்கும் என்று தெரியவந்து இருக்கிறது. இந்த நிலையில் அவர் ஆன்மீக அரசியல் செய்வேன் என்று கூறியுள்ளார். அதன்படி அவர் தற்போது இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
Rajini announced his political entry. Rajini says thet he will do spiritual politics in Tamilnadu.