ஆன்மீக பயணத்தில் அமிதாப் பச்சனுக்கு ரஜினி வேண்டுதல்

Oneindia Tamil 2018-03-13

Views 1

இங்கு ஆன்மீக பயணமாகவே வந்துள்ளேன். அரசியல் குறித்து அதற்கான களத்தில் பேசலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், 15 நாட்கள் ஆன்மீக பயணமாக இமயமலை சென்றுள்ளார். இன்று உத்ரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்ற அவருக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

டேராடூனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது நண்பரும், நடிகருமான அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக கூறினார். தற்போது ஆன்மீக பயணம் மட்டுமே வந்துள்ளதாகவும், அரசியல் பேச வேண்டிய களம் இதுவல்ல என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். நான் இன்னமும் அரசியல்வாதியாகவில்லை என்றும், அரசியல் கட்சிப்பெயரை அறிவிக்கவில்லை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Rajnikanth arrives in Dehradun, says, 'I have come here on a pilgrimage. It is a spiritual trip and has nothing to do with politics. Just now heard about it (Amitabh Bachchan's health). I will pray to God, he will be alright.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS