ஆர்.கே.நகர் தோல்விக்கு சீனியர் தலைவர்கள் தான் காரணம்..டெல்லிக்கு தமிழிசை பரபர கடிதம்- வீடியோ

Oneindia Tamil 2017-12-27

Views 8

ஆர்.கே.நகர் தோல்விக்கு தாம் காரணமே இல்லை என டெல்லி மேலிடத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விரிவாக கண்ணீர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாராம்.


ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, மீண்டும் கங்கை அமரனே போட்டியிடுவார் என பா.ஜ.க நிர்வாகிகள் பேசி வந்தனர். இதையடுத்து, கங்கை அமரனைப் பலரும் தொடர்பு கொள்ள அவரோ தொடர்பு எல்லைக்கு அப்பால் சில நாட்கள் சென்றுவிட்டார்.

பிரசாரம் செய்யும் அளவுக்கு உடல்நிலை இல்லை என அவரது தரப்பில் காரணம் சொல்லப்பட்டது. இதையடுத்து யாரை வேட்பாளராக்குவது என்ற குழப்பம் பாஜகவுக்குள் ஏற்பட்டது. ஒருவழியாக, தமிழிசையின் ஆதரவாளரான கரு.நாகராஜன் டிசம்பர் 2-ந் தேதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் முடியும் வரையில் நிர்வாகிகள் யாரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லையாம். இடைத்தேர்தலில் பணம் விளையாடுவது குறித்து அதிருப்தி தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், சாலையில் அமர்ந்து போராட்டமும் நடத்திப் பார்த்தார் தமிழிசை. வரலாறு காணாத பணம் விளையாடுகிறது. தேர்தலை ரத்து செய்துவிடுவதே சிறந்தது என அவர் கருத்து கூறியபோது, இடைத்தேர்தலை ரத்து செய்தால் ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள். தேர்தலை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனப் பதில் அளித்தார் பா.ஜ.க சீனியர் எம்.பி.

இந்தக் கருத்தை தமிழிசை எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து விரிவான கடிதத்தை பா.ஜ.க தலைமைக்கு அனுப்பியிருக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன், அதில் தமது பிரசாரத்துக்கு சீனியர்கள் யாரும் கை கொடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளாராம்.


Sources said that the BJP state president Tamilisai Soundararajan has sent a detail report on the RK Nagar Big Loss. BJP candidate Karu Nagarajan polled only 1,417 votes while NOTA got 2,373 votes in RK Nagar bypoll.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS