அரசியல் என்பது ஒரு கலை, அந்த கலை அனைவரின் கைகளிலும் போய் சேர்ந்து விடாது. நன்மை, தீமை, துரோகம், இரக்கம், நடிப்பு, சுதாரிப்பு, பேராசை, முட்டாள்தனம், ராஜதந்திரம், சுறுசுறுப்பு, சமயோசித புத்தி, சமாளிக்கும் திறன், உத்வேகம், மக்கள் அன்பு உள்ளிட்ட அனைத்தும் இருப்பவர்களுக்கும் அனுபவித்தவர்களுக்கும் மட்டும் தான் அரசியல் கலை கைக்கு வந்து சேரும்.
இந்த கலையில் தேர்ந்தவர்கள் வெற்றியையும், தோல்வியையும் சரி சமமாக பார்க்கும் மனப்பக்குவத்தை அடைந்து விடுகின்றனர். இதுவே அவர்களுக்கு தொடர் வெற்றிகளை குவிக்கும் ஆற்றலையும் தந்து விடுகிறது.
இந்த ஆற்றலை பெற முயற்சி செய்யாதவர்களுக்கு தொடர்ந்து தோல்விகளே கிடைக்கின்றன. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், பல கட்சி தலைவர்களையும், பிரமுகர்களையும் சுயபரிசோதனை செய்ய வைத்து விட்டது ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள்.
இந்த தேர்தலில் ஆண்டாண்டுகாலமாக ஆண்ட கட்சிகளும், இன மற்றும் மத அடையாளத்தை முன்னிறுதிய கட்சிகளும் மண்ணை கவ்வியது பலரையும் சிந்திக்க வைத்து விட்டது. தேர்தல் தோல்வி தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்திய திமுக, ஆர்.கே.நகரில் களப்பணி செய்யாத திமுக பிரமுகர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
DMK to take action on dmk workers who failed to work in RK Nagar. This question has rised many questions between the party workers in that most important is "whether really are we the reason for the election loss"