ஆர்கே நகர் இடைத்தேர்தலை வைத்து களைகட்டும் பெட்டிங்!- வீடியோ

Oneindia Tamil 2017-12-20

Views 3.1K

ஆர்கே நகர் தேர்தல் முடிவகள் தமிழக அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக பார்க்கப்படுவதால் சென்னை, சேலம் என பல இடங்களில், தங்கம், வெள்ளி, ரொக்கம் வைத்து நடத்தப்படும் பெட்டிங் சூடுபிடிக்கிறதாம். ஆனால் இவற்றிற்கான ஆதாரம் சிக்காததால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 11ம் சட்டமன்ற தொகுதி. வட சென்னை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ள இதன் சட்டமன்ற தொகுதி எல்லைகளாக இராயபுரம், துறைமுகம், பூங்கா நகர், பெரம்பூர், திருவொற்றியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஆர்கே நகர் தொகுதியில் 2.28 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எங்கள் தொகுதி பிரச்னைகளை கேட்பதற்கு எந்த அரசியல் பிரதிநிதியும் இல்லை என்று கவலைப்பட்டனர் ஆர்கே நகர் மக்கள், அதே சமயம் இந்த ஆண்டு ஆர்கே நகர் மக்களுக்கு செல்வசெழிப்பான ஆண்டாக மாறியது. இரண்டு முறை அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல்களில் வெற்றிக்காக காசை தண்ணியாக வாரி இறைத்த அரசியல் கட்சிகளால் மக்களின் மாத செலவில் பற்றாக்குறை ஏற்படவில்லை.

As RK nagar by polls voting is tomorrow the campaigining were over and all strict actions implemented in cconstituency outside the constituency all over Tamilnadu betting is in full swing of who will win the elections.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS