கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் உள்ளே வந்தவர் சுஜா வருணி. அவரும் ஆரம்பத்தில் நிதானமாக தான் இருந்தார். அவரை பிராங்க் என்ற பெயரில் பலரும் வம்பிழுத்து கலாய்த்ததால் கொஞ்சம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். நாட்கள் போகப்போக அவரது நடவடிக்கைகள் ஓவியா போல இருப்பதாக சில விமர்சனங்கள் அவரிடம் நேரடியாக வைக்கப்பட்டன. பின் நிகழ்ச்சியில் சகஜமாக இருந்தவருக்கும் கவிஞர் சினேகனுக்கும் இடையில் சின்ன மோதலும் ஏற்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுஜா மிகவும் கொஞ்சிக் குழைந்து பேசுகிறார் என சிலர் கூறினார்கள். அவர் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தார். பல நேரங்களில் கலங்கி அழுதிருக்கிறார். பிறகு நிகழ்ச்சி முடிவடைவதற்கு சிலநாட்கள் முன்னதாக எலிமினேட் ஆனார்.
தற்போது அவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் பைக்கில் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார். பிக்பாஸ் சுஜாவா இப்படி என ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியோடு கேட்டு வருகின்றனர். சுஜா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தும் பெரிய படங்கள் எதிலும் புதிதாக கமிட் ஆகவில்லை. அவர் நடித்த இரண்டு படங்களின் ரிலீஸுக்காக காத்திருக்கிறாராம் சுஜா.
Suja Varunee came in half of the Biggboss show hosted by Kamal Haasan. Suja was very fearful. Some days before the show ended, she eliminated. She has just released a photo of her. In this, she is sitting on the bike majestically. Fans are shocked to see Biggboss suja like this.