சசி குடும்பத்திற்கு பயந்து மறைத்து வளர்த்தார் ஜெ..-அம்ருதா- வீடியோ

Oneindia Tamil 2017-11-27

Views 10

சென்னைக்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்த போதெல்லாம் அவர் தன்னை கட்டித் தழுவி தாயன்போடு முத்தமிட்டதாக பெங்களூருப் பெண் அம்ருதா தெரிவித்துள்ளார். தன்னிடம் நீ உயிரோடு இருந்தால் போதும் என்று கூறியதாகவும் அம்ருதா பல திடுக் தகவல்களை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதாவின் மகள் தான் தான் என்று உரிமை கோரி பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் உச்சநீதிமன்றத்தை நாடினார். முகச்சாயலில் ஜெயலலிதா போலவே இருக்கும் அம்ருதா தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் தனக்கும் ஜெயலலிதாவிற்குமான உறவு குறித்த பல தகவல்களை அம்ருதா வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது : ஜெயலலிதா என்னுடைய பெரியம்மா என்று தான் நான் நினைத்திருந்தேன், என்னை வளர்த்த அம்மா ஷைலஜா அவருக்கு தங்கை முறை. அவரிடம் தான் நான் வளர்ந்தேன், ஷைலஜா அம்மா சொல்லித் தான் ஜெ.ஜெ அம்மா பெரியம்மா என்பது தெரியும்.

சென்னையில் நான் அவரை சந்தித்த போது எங்கள் இருவருக்கும் இடையே நல்ல பாசம் இருந்தது. என்னை கட்டித் தழுவி முத்தமிட்டார், எல்லாமே அம்மா என்ற உணர்வோடு தான் இருந்தது.

Bangalore girl Amrutha who is claiming daughter of Jayalalitha says that beccause of threats from Sasikala family JJ hided her and also adds she is brought with Jayalalitha's sister Shailaja.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS