பாலிவுட் நடிகை லிசா ஹேடன் தலைமுடியை கலர் செய்துள்ளதை பார்த்து நெட்டிசன்கள் பேய் என்று கிண்டல் செய்துள்ளனர். பாலிவுட் நடிகை லிசா ஹேடன் தொழில் அதிபர் ஒருவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர் கடந்த மே மாதம் ஜாக் என்ற மகனை பெற்றெடுத்தார். பிரசவத்திற்கு பிறகும் அவர் ஸ்லிம்மாகவே இருப்பது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
லிசா ஹேடன் கருப்பாக இருந்த தனது தலைமுடியின் நிறத்தை மாற்றி புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளயிட்டுள்ளார். அவர் படத்திற்காகவா அல்லது சும்மா தலைமுடிக்கு கலர் செய்தாரா என தெரியவில்லை.
லிசா ஹேடனின் புதிய புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் சிலர் அழகாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். சிலரோ அம்மாடி பேய் என்று கலாய்த்துள்ளனர்.
தயவு செய்து முடிக்கு கருப்பு கலர் அடிங்க லிசா. உங்களை இந்த நரைத்த முடியில் பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிம் கர்தாஷியன் போன்று இருக்கிறீர்கள், லேடி காகா மாதிரி உள்ளீர்கள் என்று சிலர் தெரிவித்துள்ளனர். எக்ஸ் மென் கதாபாத்திரம் ஸ்டார்ம் மாதிரி இருக்கிறீர்கள் என்றும் நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர்.
Netizens are both praising and making fun of Bollywood actress Lisa Haydon who has coloured her hair platinum. It is not sure whether she has coloured her hair for movie or just for fun.