பொழுது போக்கிற்காக அரசியலுக்கு நடிகர்கள் வரக்கூடாது- ரோஜா காட்டம்- வீடியோ

Oneindia Tamil 2017-12-12

Views 399

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் பொழுது போக்கிற்காகவும், அரசியல் கட்சிகளை ஊக்குவிக்க அரசியலுக்கு வரக்கூடாது என்று நடிகர் விஷால் அரசியல் பிரவேசம் குறித்து நடிகை ரோஜா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏமுமலையான் கோவிலில் நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா சாமிதரிசனம் செய்தார். தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் அவர் அரசியலுக்கு வந்தால் தான் அவரை ஆதரிப்பதாக கூறினார். மேலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் அப்படி வருபவர்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றார். அதேசமயத்தில் பொழுது போக்கிற்காகவும் அரசியல் கட்சிளை ஊக்குவிப்பதற்காக நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களை மக்கள் ஆதரவளிக்கமாட்டார்கள் என்று விஷாலின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு ரோஜா பதிலளித்தார்.

Des : Actress Rose has commented on Vishal's entry into politics that anyone who wants to do good for people can come to politics but not for politics and for political parties to promote politics.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS