செல்போன் பேச்சு தொடர்பான சந்தேகத்தில் ஏற்பட்ட சண்டையில் இளம் பெண் தற்கொலை செய்த சம்பவம் திருச்சி அருகே நடந்துள்ளது. திருச்சி-திண்டுக்கல் சாலை இனாம்மாத்தூர் ஊராட்சியை சேர்ந்தவர் வேலுச்சாமி (30). பிளம்பர். ஐஸ்வர்யா (21) என்பவருடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் ஒரு செல்போன் அழைப்பால், தம்பதிகளுக்குள் சண்டை ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலை வேலை விஷயமாக வேலுச்சாமி திருச்சிக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியபோது, ஐஸ்வர்யா யாருடனோ செல்போனில் பேசியதை பார்த்து வேலுச்சாமி சந்தேகமடைந்துள்ளார்.
வேலுச்சாமி இதுகுறித்து கேட்டதற்கு தனது அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன் என்று ஐஸ்வர்யா பதில் அளித்துள்ளார். சந்தேகம் தீராத வேலுச்சாமி, ஐஸ்வர்யாவிடம் போனை கொடுக்குமாறு கேட்டுள்ளார். அப்போது, ஐஸ்வரியா அவசர அவசரமாக பேசிய நம்பரை கால் பதிவில் இருந்து அழித்துவிட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது.
Wife hanged herself as husband doubt over her phone calls, in Trichy district.