திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரே திருமலை என்ற செல்போன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் முருகானந்தம் வழக்கம்போல கடையை திறந்து பொதுமக்களுக்கு செல்போனை வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது கணவன் மனைவி இருவர் செல்போன் வாங்குவதாக கூறி வந்துள்ளனர். அப்போது அந்தக் கடையில் வேலை பார்க்கும் பைசல் மற்றும் வெங்கட் ஆகியோர் செல்போனை அவர்களிடம் காண்பிப்பதற்காக மேசையின் மீது எடுத்து வைத்துள்ளார். அப்பொழுது செல் போன் வாங்குவது போல் பேசிக் கொண்டு மேசையின் மீது வைத்திருந்த ஒரு செல்போனை அந்தப் பெண் எடுத்து அவர் வைத்திருந்த கைப்பையில் போடுகிறார். அவருடைய கணவர் மற்றொரு செல்போனை எடுத்து பார்த்துள்ளார். கணவன் மனைவி இருவர் சேர்ந்து செல்போனை திருடும் காட்சிகள் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகள் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.