காங்கிரஸ் கட்சியின் மேல்தட்டு மனநிலை குறித்த விமர்சனத்தை, குஜராத் தேர்தல் பிரசாரத்தில், தொடர்ந்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குஜராத்தின் மோர்பி பகுதிக்கு வந்தபோது மூக்கை மூடிக்கொண்டதை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
தான் ஏழை என்பதால்தான் பிரதமராக உயர்ந்ததை காங்கிரசால் பொறுக்க முடியவில்லை என மோடி ஏற்கனவே ஒரு பிரசார கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தாரா்.
மோர்பி நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, இந்திரா காந்தி மூக்கை மூடியபடி வந்த போட்டோ அப்போது, சித்ரலேகா இதழில் வெளியானதாக குறிப்பிட்டார். மேலும், இந்திரா காந்தியை போலவே, மூக்கை மூடி காண்பித்தார்.
அதேநேரம், ஜனசங்கம், ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு் மோர்பியின் தெருக்கள் வாசம் வீசுகிறது. மனிதாபிமானத்தின் நறுமணம் அது என்று மோடி தெரிவித்தார்.
"When Indira Ben came to Morbi,I remember there was a photo of her in Chitralekha Magazine with a hanky over her nose due to the foul smells, but for Jansangh/RSS the streets of Morbi are fragrant,its the fragrance of humanity" says PM Modi.