பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார ஸ்டைலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதால் தனது நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளார் மோடி. கூப்பிய கரங்களோடு அவர் மக்களிடம் வேண்டுகோள்விடுக்கும் போட்டோக்கள்தான் இப்போது பாஜக சோஷியல் மீடியா பிரிவினரால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 4 மாதங்கள் முன்புவரை குஜராத் தேர்தலை எளிதாக ஊதித்தள்ளிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தது, பாஜக. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.
ஜிஎஸ்டிக்கு எதிராகவும், பண மதிப்பிழப்புக்கு எதிராகவும் குஜராத்தின் வணிக சமூகம் பொங்கி எழுந்துள்ளது. கையில் பணப் புழக்கம் இல்லை என்று அவர்கள், கொந்தளித்தபடி உள்ளனர். களத்தில் நிலவரம் சூடாவதை பாஜக தலைமை உணர்ந்துள்ளது. கருத்துக் கணிப்புகளும் காங்கிரஸ் கை ஓங்குவதாக கூறி வருகின்றன. இப்போதைக்கு தாமரைக்கு கீழேதான் கை இருக்கிறது என்றாலும், தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் நிலைமை இன்னும் மோசமாகலாம் என கணிக்கிறது தாமரை தலைமை.
இந்த சூழ்நிலையை புரிந்து கொண்டுதான் பிரசார ஸ்டைலை மாற்றியுள்ளார் பிரதமர் மோடி. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 15ல் தாமதமாக தொடங்குவதற்கு காரணமே, பிரதமர் முழுக்க குஜராத் மீது கவனம் செலுத்தும் நிலை வந்துள்ளது என்பதன் அறிகுறிதான்.
Realisation that significant sections of people are disgruntled and Modi’s conclusion that it is prudent to change tack are evident in a graphic doing the rounds on the party’s social media networks.