’பத்மாவதி’ திரைப்படத்தில் அப்படி என்னதான் பிரச்னை?..எதிர்ப்பவர்கள் சொல்லும் காரணங்கள்-

Oneindia Tamil 2017-11-22

Views 2

சஞ்சய் லீலா பன்சாலியின் 'பத்மாவதி' திரைப்படத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவும், எதிர்ப்பும் வலுத்துக்கொண்டே போகிறது.
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில், ராஜ்புத் வம்சத்தின் ராணி பத்மாவதியின் வரலாறு திரைப்படமாக்கப்பட்டு உள்ளது. இதில் ராணி பத்மாவதியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ராஜ்புத்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக இந்த படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
ராஜ்புத் மக்கள் அதிகம் வசிக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், ஹரியானா, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பா.ஜ.க தலைவர்கள் மற்றும் பா.ஜ.க ஆதரவு இயக்கங்கள் இந்தப்போராட்டத்தில் முன் நின்று நடத்துகிறார்கள். படத்தின் இயக்குநர் பன்சாலி, நடிகர்கள் ரன்பீர் கபூர், தீபிகா படுகோனுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்த நிலையில், படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் படத்திற்கு எதிர்ப்பும் ,ஆதரவும் வலுத்துவருகிறது. தங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும் திரைப்படத்தை தங்கள் உயிரைக் கொடுத்தாவது தடை செய்வோம் என்று ராஜ்புத் கார்னி சேனா என்கிற அமைப்பு தீவிரமாக இயங்கி வருகிறது. இந்தப்படத்தை வெளியிட்டால் தீபிகாவின் மூக்கை அறுப்போம் என்றும் சபதம் எடுத்துள்ளனர். இந்தப்படத்தில் அப்படி என்ன தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது?

ராஜஸ்தான் திருமணங்களில் ஆடப்படும் 'கூமார்'எனும் நடனத்தை அரச குலப்பெண்கள் ஆடமாட்டார்கள். ஆனால், திரைப்படத்தில் ராணியாக வரும் தீபிகா அந்த நடனத்தை ஆடுவது போல காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. உடலை மறைத்து ஆடவேண்டிய நடனத்தில் தீபிகா இடுப்பு தெரியும்படி ஆடி இருக்கிறார் அது தங்கள் மனதை புண்படுத்துவது போல இருக்கிறது என்று போராட்டக்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.

The Reason Behind why the Historical Movie Padmavati facing Opposition in North India.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS