குஜராத்தில் பாஜகவுக்கு சரிவு.. காங்கிரஸ் திடீர் முன்னேற்றம்.. வீடியோ

Oneindia Tamil 2017-11-13

Views 34.7K

குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவின் வெற்றி என்பது ரொம்ப சுலபமாக இருக்காது என்கிறது கருத்துக் கணிப்பு தகவல்கள். டெல்லியை சேர்ந்த லோக்நிதி மற்றும் சென்டர் ஆப் ஸ்டடி டெவலப்பிங் சொசைட்டிஸ் ஆகியவை இணைந்து, ஏபிபி என்ற செய்தி சேனலுக்காக நடத்திய கருத்து கணிப்பில், புதிய தகவல்கள் வெளியே வந்துள்ளன. அது காங்கிரசுக்கு உற்சாகம் ஊட்டுவதாக உள்ளது. குஜராத்தில் டிசம்பர் 9 மற்றும் 14ம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் நடுவே இங்கு நேரடி போட்டி உள்ளது. இந்த நிலையில், இவ்வாண்டு, அக்டோபர் 26ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதிவரை நடத்திய லேட்டஸ்ட் கருத்துக் கணிப்பில் சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கருத்துக் கணிப்பு 200 இடங்களில் 3757 வாக்காளர்களிடம் நடத்தப்பட்டுள்ளது. 182 சட்டசபை தொகுதிகள் கொண்ட குஜராத்தில் இந்த கருத்து கணிப்பு சுமார் 50 தொகுதிகளை தொட்டுச் சென்றுள்ளது. ஆகஸ்ட் மாதம், இதே சர்வே அமைப்புகள் கருத்து கணிப்பு நடத்திய பகுதிகளில் இருந்து இது மாறுபட்டது.

The second round of pre election Tracker in Gujarat was conducted by Lokniti, Centre for the Study of Developing Societies (CSDS), Delhi, for ABP News, reveals Congress has gain in vote sharing.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS