குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காது; அதிகபட்சமாக 91 முதல் 99 இடங்களைத்தான் அக்கட்சி கைப்பற்றும் என ஏ.பி.பி.-சி.எஸ்.டி.எஸ். கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி 76 முதல் 88 இடங்களில் வெல்லும் என்றும் இக்கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. குஜராத் மாநிலத்தில் 22 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்து வருகிறது பாஜக. இம்மாநிலத்தின் 182 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இத்தேர்தல் தொடர்பாக ஏ.பி.பி செய்தி நிறுவனம் மற்றும் சி.எஸ்.டி.எஸ் இணைந்து கருத்து கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளன. இதில் 22 ஆண்டுகாலம் குஜராத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கிற பாஜக இம்முறை மரண அடிதான் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியானது அதிகபட்சமாக 91 முதல் 99 இடங்களைக் கைப்பற்றும் என்கிறது இக்கருத்து கணிப்பு. குஜராத்தில் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 93 எம்.எல்.ஏக்கள் தேவை. 22 ஆண்டுகாலமாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து வந்த பாஜக இம்முறை பெரும்பான்மைக்கே அல்லாடும் நிலை உருவாகிவிட்டது. தற்போது பாஜகவுக்கு 117 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் குஜராத்தில் மிக அதிகபட்சமாக 60 இடங்களைத்தான் கைப்பற்றும் என்பது பொதுவான கருத்தாக இருந்தது. ஆனால் தற்போதைய ஏபிபி-சிஎஸ்டிஎஸ் கருத்து கணிப்பொ காங்கிரஸ் கட்சியானது 71 முதல் 86 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை தெறிக்கவிடும் என்கிறது. குஜராத் சட்டசபையில் காங்கிரஸுக்கு 59 தற்போது எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
According to the ABP-CSDS survey, 91-99 seats for the BJP while Congress is expected to get 76-88 seats.