யமஹா ஒய்இசட்எஃப் ஆர்1எம் என்ற சூப்பர்ஸ்போர்ட் பைக்கை அந்நிறுவனம் பிளாக்ஷிப் நிறுவனமாக உருவாகியுள்ளது. இந்த பைக் ஒரே ஒரு வேரியன்டில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கில் 998 சிசி 4 சிலிண்டர், 4 ஸ்டோக், 4 வால்வுகள் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 13,500 ஆர்பிஎம்மில் 197.2 பிஎச்பி பவரையும், 11,500 ஆர்பிஎம்மில் 112.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் லிக்யூட் கூல்டு டிஓஎச்சி இன்ஜினாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் அதிகபட்சமாக 299 கி.மீ வேகம் வரை சீறிப் பாயும் திறன் கொண்டது. பிரேக்குகளை பொருத்தவரை இரண்டு வீல்களிலும் டூயல் ஏபிஎஸ் கொண்ட டிஎஸ்டிக் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.
#r1m
#r1
#yamahar1
#yamahaR1M
#yamahar1
~ED.157~