சென்னை தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதா இவர் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சுதா அவர் வசிக்கும் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனம் தயாராக இருந்த இரண்டு நபர்களுடன் தப்பிச் சென்றுள்ளனர்.