இராஜபாளையத்தில் மில் தொழிலாளி வீட்டில் பட்டப்பகலில் 12 பவுன் நகை, பணம் திருட்டு. மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 45). மனைவி சாந்தியுடன் இப்பகுதியில் விஜயராஜ் என்பவரது மகன் ஆனந்தகுமார் வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். சசிகுமார் தனியார் நூற்பாலையிலும், மனைவி சாந்தி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில் மதியம் 2 மணி அளவில் உணவு அருந்துவதற்காக வீட்டிற்க்கு திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 12 பவுண் நகை மற்றும் கீழ் வீட்டில் ஐந்து ஆயிரம் ரூபாய் பணம் என திருடு போனது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து உடனடியாக இராஜபாளையம் தெற்கு காவல் நிலைத்தில் புகார் அளித்ததன் பேரில், விருதுநகரில் இருந்து கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் ராக்கி உதவியுடன் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் முக்கிய சாலையில் அமைந்துள்ள வீட்டில் திருடு போனது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.