மதுரை திருமங்கலம் நகராட்சியில் 17வது வார்டு பெண்கள் வாக்குச்சாவடி மையத்தில் தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்காக பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டிஎஸ்பி சிவக்குமார் தலைமையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட போலீசார் பணியில் உள்ளனர். தொடர்ந்து தேர்தல் நடக்கும் இடத்தில் இருந்து 200 மீட்டருக்கு எந்த ஒரு கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.