இரட்டை இலை எடப்பாடி அணிக்கே என்கிற தேர்தல் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பு நகலை தான் பார்த்துவிட்டதாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் தெரிவித்து உள்ளார். இரட்டை இலை சின்னம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடந்து வருகிறது. ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி மற்றும் தினகரன் அணி ஆகியோரது இறுதி வாதங்களை அடுத்து இன்று தேர்தல் ஆணையம் இறுதி தீர்ப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது.
தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முதல்வர் அணிக்கு ஒதுக்கிவிட்டதாக தொலைக்காட்சிகளில் செய்தி வெளியான நிலையில் தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். இந்நிலையில், சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் இதனை உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், டி.டி.வி.தினகரன் தரப்போ இதை தொடர்ந்து மறுத்துவருகிறது.
Final Judgement of Election Commission says Two Leaves symbol is only for EPS and OPS team said ADMK MP Vijayakumar.