ஜெயலலிதா எனும் நான்...வானம் தலையில் இடித்துவிட போகுது... பார்த்து வா மகளே...வீடியோ

Oneindia Tamil 2017-12-05

Views 72

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் அவர் இறப்பால் மீளா துயரத்தில் இருக்கும் தொண்டர்கள் டுவிட்டரில் தங்கள் கருத்துகளை பரிமாறி வருகின்றனர். ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவுகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் 75 நாள்கள் சிகிச்சைக்கு பிறகு, மரணமடைந்துவிட்டார். தமிழகத்தையே மீளா துயரத்தில் விட்டு சென்ற அந்த தங்கத்தாரகைக்கு இன்று முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. நெட்டிசன்கள் டுவிட்டரில் பதிவு செய்துள்ள இரங்கல்களின் தொகுப்பு இதோ...

வானம் தலையில் இடித்திட போகுது பாத்து வா மகளே !!! நீ வளர்ந்த உயரம் அப்படி பட்டது பார்த்து வா மகளே !!! தெய்வ திருமகளே, தமிழ் நாட்டின் குளவிளக்கே !!!!

இறந்தும் இறவாப் புகழ் பெற்று இறைவனை ஆளும் ஜெ ஜெயலலலிதா எனும் நான் என்ற மந்திரம்.

கருணை நிறைந்த முகம்.... கவிதை பிறக்கும் புன்சிரிப்பு... பகை எவர்க்கும் பணியாத தலை... தமிழுக்கு தன்னைக்கொடுத்து, தமிழ்நாட்டிற்க்கு காவிரி தந்து தலைநிமிரச்செய்த தாயே... உன் நெஞ்சுரத்திற்க்கு எங்களது வாழ்க்கையும் வார்த்தையும் சமர்ப்பணம்

Today is Jayalalitha's first anniversary day. Netisans shared their condolences for Jayalalitha's first death anniversary.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS