#cithiraitv #நைட் முழுக்க பெட்ரூமில் பாட்டி பக்கத்திலேயே பாம்பு ஒன்று விடிய விடிய படுத்து தூங்கி உள்ளது.. அதுவும் அது விஷமுள்ள நல்லபாம்பு.. பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் கடலூரில் நடந்துள்ளது. கடலூர் மஞ்சக்குப்பம் காமராஜர் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர்.. இவர் வீட்டில் வயதான பாட்டி ஒருவர், அவருடைய பெட்ரூமில் நேற்றிரவு படுத்து தூங்கி கொண்டிருந்தார். நேற்று அதிகாலையில் பாட்டி, படுக்கையில் திரும்பி படுக்க முயன்றார்.. அப்போது, தனக்கு பக்கத்திலேயே விசித்திரமான சத்தம் ஒன்று வருவது போல கேட்டுள்ளார். எனவே, எழுந்து சென்று லைட்டை போட்டு பார்த்துள்ளார். அப்போதுதான், தன்னுடைய படுக்கையில் ஒரு பாம்பு இருப்பதை கண்டு அலறினார்.. இவரது அலறல் சத்தத்தை கேட்டு அந்த வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர்.. படுக்கையில் அந்த பாம்பு நெளிந்து கொண்டிருந்ததை கண்டு அவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.. இதனால் செய்வதறியாது தவித்தவர்கள், உடனடியாக பாம்பு பிடிக்கும் செல்லா என்ற நபருக்கு தகவல் தந்தனர். பாம்பு ஆர்வலர் செல்லாவும், பாட்டி வீட்டுக்கு வந்து அவரது பெட்ரூமுக்குள் சென்று பார்த்தார்.. அப்போதுதான் அது நல்ல பாம்பு என்றே தெரியவந்தது.. ஆனால், அதை உடனடியாக பிடிக்க செல்லாவால் முடியவில்லை.. செல்லா அருகில் சென்றதுமே, பெட் மேலேயே படமெடுத்து ஆடியது.. ஆக்ரோஷமாக கடிக்கவும் முற்பட்டது. இவ்வளவு ஆக்ரோஷமாக இருந்த பாம்பு, பாட்டியுடன் எப்படி இரவெல்லாம் படுத்து தூங்கியிருக்க முடியும் என்ற கேள்வி செல்லாவுக்கு எழுந்தது. இவ்வளவு ஆக்ரோஷமான பாம்பு, பாட்டியை கடிக்காமல் இருந்ததும் ஆச்சரியத்தை கிளப்பியது.. எனினும் தொடர்ந்து போராடி அந்த பாம்பினை ஒருவழியாக லாவகமாக பிடித்து, பாட்டிலில் அடைத்தார்.. பிறகு அதை எடுத்து சென்று காப்பு காட்டில் பத்திரமாக விட்டுவிட்டார். இந்த பாம்பு எப்படி உள்ளே வந்தது என்றே தெரியவில்லை.. வீட்டிற்குள் நுழைந்து பெட்ரூமுக்குள் வந்து, படுக்கையில் ஏறியது வரை யாருக்குமே எதுவுமே தெரிய காணோம். அன்று மாலைதான், கொடியில் காய்ந்த துணிகளை கொண்டு வந்து படுக்கையில் போட்டுள்ளனர்.. ஒருவேளை காய்ந்த துணிகளுடன் சேர்ந்து அந்தப் பாம்பும் உள்ளே வந்து இருக்கலாம் என்று செல்லா சொல்கிறார். விடிய விடிய பாட்டியுடனேயே ஒன்றாக பாம்பு படுத்து தூங்கிய சம்பவம் கடலூரில் பீதியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது.