#cithiraitv #செல்வம் பெருக வாழைமட்டையால் அடி வாங்கும் நிகழ்வு மட்டையால் அடித்து தரிசனம் தந்த நடராஜர்

chithiraitv 2021-12-20

Views 2

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது . அந்த வகையில் இந்த ஆண்டு கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது. அப்போது நடராஜருக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நடராஜர் வடிவில் சிவபெருமான் காலை தூக்கி நடனமாடுவதை போல், சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஆருத்ரா தரிசன காட்சி அளித்தார். அப்போது மகாதீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின்னர் நடராஜர், அம்பாளுடன் சேர்ந்து சப்பரத்தில் கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்தார். ஆலயத்தின் ராஜகோபுரம் முன்பு ஒரு பந்தலில் மட்டையடி உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது நடராஜருக்கும், அம்பாளுக்கும் சிறு ஊடல் ஏற்பட்டதன் காரணமாக பசுபதீஸ்வரர் கோவிலில் தனித்தனியாக எழுந்தருளியது சம்பிரதாயம் ஆகவே அவர்களை சமாதானம் செய்யும் பொருட்டு சுந்தரமூர்த்திநாயனார் பல்லக்கில் வந்து, அம்பாளிடம் முறையிட்டு சமாதானம் செய்தார். இதனை விளக்கும் விதமாக தண்டபாணி தேசிகர், சுந்தரராக தன்னை பாவித்து நடந்த நிகழ்ச்சிகளை கூறி தூது சென்றார். அப்போது 2-வது முறையாக சென்ற போது, அம்பாளின் பணிப்பெண்கள் பூக்களால் சுந்தரரை அடிப்பது புராண வரலாறு ஆகும். அந்த வகையில் தூது சென்ற தண்டபாணி தேசிகருக்கு வாழை மட்டையால் அடி விழுந்தது போல் அரங்கேற்றம் நடந்தது. அதனை தொடர்ந்து சண்டிகேசுவரருடன், சேர்ந்து வந்து சுந்தரமூர்த்தி பேசும் போது அம்பாளின் கோபம் தணிந்து தெளிவு பெற்றார். பின்னர் நடராஜருடன், சேர்ந்து அவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கிடையே நிகழ்ச்சியின் போது பக்தர்கள் முண்டியடித்து கொண்டு வந்து, தங்களது முதுகினை காட்டி வாழைமட்டையால் அடி வாங்கி சென்றனர். இதன் மூலம் குழந்தை செல்வம், வியாபார விருத்தி உள்ளிட்டவை உண்டாகும் என்பது ஐதீகம் ஆகும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS