காரின் கண்ணாடியை உடைத்து பேக்கை திருடி சென்ற திருடனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பழனி திண்டுக்கல் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெளியே கார் ஒன்று நின்று கொண்டிருந்தது . அந்த காரை நோட்டமிட்ட வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் மூன்று பேர்காரின் கண்ணாடியை உடைத்து ஹேன்பேக்கை திருடி கொண்டு ஓடினர் .அதை கண்ட பொதுமக்கள் பேக்கை கொண்டு சென்றவனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர் இருவர் தப்பி சென்றனர் சிக்கிய கொள்ளையனை கைது செய்து விசாரணை செய்த போது திண்டுக்கல் பழனி சாலையில் நிறுத்தியிருந்த கார் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை திருடி வந்ததாக தெரிவித்தனர் பின்னர் அவர்களிடம் இருந்து மயக்க மருந்து,கார்கண்ணாடிகளை உடைக்க பயன்படுத்தும் கவட்டை ஒரு ஹேன்பேக் உள்ளிட்டவைகளை மீட்ட போலீசார் தப்பியோடிய அவனது கூட்டாளிகள் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்
Des : The incident took place by the public and handed over the police to the police by breaking the car's specs and stealing a bakery