ஆந்திர சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று துவங்கி நடைபெற்று வரும் நிலையில் இரண்டாவது நாளான நேற்று வெள்ளிக்கிழமை அன்று எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவருடைய குடும்பத்தார் ஆகியோரை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தரக்குறைவாக விமர்சித்து பேசினர். இதனால் ஆவேசம் அடைந்த சந்திரபாபுநாயுடு கௌரவ சபை என்று கூறப்படும் கௌரவம் இல்லாத இந்த சபைக்கு இனிமேல் நான் முதலமைச்சராகா ஆனால் மட்டுமே வருவேன். பொதுமக்கள் என்னை ஆசிர்வதிக்க வேண்டும் என்று என்று கூறி தன்னுடைய கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் வெளியேறினார். பின்னர் நடந்த சம்பவங்கள் பற்றிய செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க முற்பட்டார். அப்போது முகத்தை கைகளால் மூடிக்கொண்டு பேச இயலாமல் சந்திரபாபுநாயுடு கதறி அழுதார். இதனால் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, இந்நிலையில் நடிகையும், நகரி எம்.எல்.ஏ வுமான ரோஜா அதிரடியாக அவரை விமர்சனம் செய்துள்ளார். அதில் கடைசியில் பை பை சந்திரபாபு பை பை என்று கூறி அவர் பேசிய பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகி வருகின்றது