நடிகர்கள் உள்நோக்கத்தோடு சில சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் திரைப்படம் எடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கண்டனம்
பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் தொழில் துறையினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கோவை மாவட்ட செயலாளர் நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினருமான ER ஈஸ்வரன் கலந்துகொண்டார் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது,. ஊடகங்களில் அதிமுக செய்திகள் வருவதைவிட பிஜேபி செய்திகள் வரவேண்டும் என்று எந்தவிதமான ஆக்கபூர்வமான முயற்சிகளும் இல்லாமல் அறிக்கைகளை கொடுத்து முக்கியத்துவம் பெற அண்ணாமலை முயற்சி செய்கிறார் முல்லைப் பெரியாறு அணையை பொருத்தவரை தமிழக அரசுக்கு முழுமையாக தெரியும் நீர்வளத்துறை அமைச்சர் அனுபவம் கொண்டவர் கண்டிப்பாக தமிழகத்திற்கு ஆதரவான நிலை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை அண்ணாமலை போன்றவர்கள் அவசரஅவசரமாக செய்திகளை உருவாக்கி ஊடகங்களில் முக்கியத்துவம் பெற முயற்சிக்கிறார் முல்லைப் பெரியாறு பிரச்சனை, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம், கேரளாவிலிருந்து வரும் எந்த நதிகளாக இருந்தாலும் முதல்வர் கேரளா அரசுடன் சுமூக உறவு வைத்துள்ளார் கேரளாவினால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வராது சிறு மாற்றம் இருந்தாலும் நீர்ப்பாசன பிரச்சனையை தமிழக அரசு பாதுகாக்கும். ஜெய் பீம் படம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கும் போது திரைத்துறையினர் தயாபாளராக இருந்தாலும் சரி நடிகராக இருந்தாலும் எந்த சமுதாயத்தினரையும் புண்படுத்தாமல் திரைப்படம் எடுக்க வேண்டும் ஆக்கபூர்வமான கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க அதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும் எக்காரணம் கொண்டும் சிறிய அளவில் கூட மக்களின் மனம் புண்படும் வகையில் படம் எடுக்கக்கூடாது. இன்று ஜெய்பீம் படத்தில் சில காட்சிகளை மாற்றி வைத்துள்ளார்கள் முதலிலேயே அதை செய்திருக்க வேண்டும் . தற்போது மற்றவர்களுக்கு தெரிவது அவர்களுக்கு தெரியாதா? உள்நோக்கத்தோடு சில விஷயங்கள் திரைப்படத்தில் செய்வதால் திரைத்துறையினர் எதிர்ப்புகளை சந்திக்கின்றனர். பல நேரங்களில் பல சமுதாயத்திற்கு எதிரான சில நிலைப்பாடுகளை ஒரு சில நடிகர்கள் காட்சிகளாக அமைக்கின்றனர் என்று கண்டனம் தெரிவித்தார் அதையெல்லாம் தவிர்ப்பது தமிழக மக்கள் சுமுகமாகவும் ஒற்றுமையாகவும் வாழ வழி வகுக்கும் என்றும்., கடந்த அதிமுக ஆட்சியில் சென்னையில் கால்வாய்கள், ஏரிகள் தூர்வாரப்படாத காரணத்தினால்தான் தற்போது சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது என்று குற்றம்சாட்டினார்