மொஹரம் பண்டிகையான இன்று தடை உத்தரவு காரணமாக களையிழந்து காணப்பட்ட உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா ; பக்தர்கள் இல்லாமல் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை.
இறைவனின் தூதரான இப்ராகிம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் இஸ்லாமியர்களால் மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவில் களையிழந்து காணப்பட்டது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களுக்கு நாகூர் தர்காவில் தரிசனம் செய்ய தடை நீடித்து வருவதால், உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா வாசல் வெறிச்சோடி காணப்பட்டது. அலங்கார வாசல் கதவு மூடப்பட்டு இருந்த காரணத்தால் அங்கு குறைவான அளவில் வந்த வெளியூரை சேர்ந்த பக்தர்கள் வாசலில் இருந்தபடியே வழிபாடு நடத்திவிட்டு சென்றனர். தர்காவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாத போதிலும், தர்கா நிர்வாகிகள் தலைமையில் வழக்கமாக நடைபெறும் மொஹரம் பண்டிகைக்கான சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது கொரோனா கோரப்பிடியில் நாட்டுமக்கள் மீண்டு வர பிரார்த்தனை செய்யப்பட்டது.