நாகையில் பல்வேறு இடங்களில் பறவைகளை வேட்டையாடிய காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த இருவர் கைது பறவைகள் பறிமுதல் வனத்துறையினர் நடவடிக்கை
நாகை தம்பிதுரை பூங்கா அருகே இரண்டு பேர் பறவைகளை வேட்டையாடினர். அப்போது அந்த வழியாக சென்ற எஸ் பி யின் பாதுகாவலர் சண்முகம் அவர்களை பிடித்து நாகை வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தார். வனத்துறை அதிகாரிகள் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் காரைக்கால் அருகே கோயில்பத்து பகுதியை சேர்ந்த சிவா (20), கார்த்திக் (23) என்பதும், இவர்கள் வழக்கமாக பறவைகளை வேட்டையாடி மதுபான கடைகளில் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்த அணில் மற்றும் புறா வேட்டையாட பயன்படுத்தப்பட்ட உண்டி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். பறவைகளை வேட்டையாடிய இரண்டு பேருக்கும் அபராதம் அல்லது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.