சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுக பெயரில் போஸ்டர் - அதிமுக காவல்நிலையத்தில் புகார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக நிர்வாகிகள், தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அதிமுக என்ற பெயரில் சசிகலாவிற்கு ஆதரவாக ஆகஸ்ட் 18ம் தேதி அவர் பிறந்த நாளை முன்னிட்டு வால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதில் சமீபத்தில் அதிமுகவில் நீக்கப்பட்டவர் மற்றும் அமமுக நிர்வாகிகள் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் அதிமுக பெயரை தவறாக பயன்படுத்தி, அதிமுக கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாமல், வால் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் அதிமுக நகரச் செயலாளர் விஜய பாண்டியன் 11 பேர் மீது புகார் அளித்துள்ளார்