திமுக பிரமுகர் குட்கா பொருள்களை கடத்தும் சிசிடிவி காட்சிகளை அவரது உடன் பிறந்த அண்ணன் ஒருவர் சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளது திமுக கட்சியினரிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 150 மூடைகள் குட்கா பொருட்களை பதுக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் திமுகவை சேர்ந்த பிரமுகர் ஒருவருக்கு 20 இலட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்களை பதுக்கி வைத்ததற்கு தொடர்ப்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் திமுக பிரமுகரின் உடன்பிறந்த அண்ணன் தன் தம்பி செய்யும் குட்கா பொருள்கள் கடத்தலின் சிசிடிவி காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்பியதால் இப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வி.ஆர்.என் நகரில் குட்கா புகையிலை பொருட்கள் இருப்பதாக மாவட்ட கண்காணிப்பாளர் மனோகர் அவர்களுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தனிப்படையினர் அப்பகுதியில் சோதனை செய்ததில் இனாம் கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர் வி.ஆர்.என் நகரிலுள்ள ஒரு குடோனை மாதம் 6000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து அதில் சக்தி மசாலா பொடி விற்பதாக கூறி குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறையினர் சோதனை செய்த போது குடோனில் 20 லட்சம் மதிப்பிலான 150 மூடைகளில் குட்கா புகையிலை இருந்தது தெரியவந்தது.இந்நிலையில் மூடைகளை பறிமுதல் செய்து நவநீதகிருஷ்ணன் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.மேலும் அவரிடம் இருந்து 7.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.இதில் திமுகவை சேர்ந்த மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கமாங்கனி என்பவருக்கு தொடர்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலை மூடைகளை ஆய்வு செய்ய வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்... தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்க்காக மாவட்டதில் அனைத்து இடங்களிலும் சோதணைகளை தீவிரபடுத்தியுள்ளோம் என்றும்., சில குறிபிட்ட பெரிய தொழில் அதிபர்கள் இதில் சம்பந்தபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.இவ்வளவு தடை செய்யபட்ட பொருள்கள் எவ்வாறு வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார். ஆளுங்கட்சியை சேர்ந்த திமுக பிரமுகருக்கு நவநீதகிருஷ்ணனுடன் சேர்ந்து குட்கா பொருள்களை பதுக்கி வைத்ததற்கு தொடர்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கேள்வி எழுப்பிய போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும், இந்த குட்கா பதுக்கலில் திமுக பிரமுகரான மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கமாங்கனிக்கு தொடர்பு இருப்பதாக அக்கம் பக்கத்தில் கூறி வந்தனர்.இந்நிலையில் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று காவல்துறையினர் கூறி வந்ததனர்.மேலும் ஆளுங்கட்சி பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க அலட்சியம் காட்டி வந்த காவல்துறையினர் மத்தியில் தற்போது திமுக பிரமுகர் தங்கமாங்கனி என்பவருடைய உடன் பிறந்த அண்ணன் ஆனழகன் என்பவர் தன் தம்பி செய்யும் குட்கா புகையிலை பொருட்கள் கடத்ததில் நவநீதனுடன் சேர்ந்து தங்கமாங்கனி ஈடுபடுவது காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்த போது காவல்துறையினரை மிரட்டி அனுப்புவது போன்ற சிசிடிவி காட்சிகளை சமுக வலைதளங்களில் பரப்பியும் இந்த அரசும் காவல்துறையும் தகுந்த நடவடிக்கை