உக்கடம் வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்த வண்ணம் உள்ளன
கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது அதன் ஒரு பகுதியாக சுங்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனை பின்புறமுள்ள வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டு எழில்மிகு நடைபாதை, மிதவை நடைமுறை மற்றும் கடைகள் சிறுவர்களுக்கு விளையாட்டு பூங்கா மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிப்பது என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது இதன் காரணமாக கரைகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றது இந்த சூழ்நிலையில் வாலாங்குலத்தில் திடீரென ஆயிரக்கணக்கான ஜிலேபி கட்லா வகை மீன்கள் செத்து மிதக்கின்றன இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது அந்த வழியாகச் செல்வோர் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பற்றியவாறு செல்கின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருவதாலும் குளத்தின் கரையை பலப்படுத்தும் வகையில் பல்வேறு பொருட்கள் கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து நடப்பதால் குளத்தில் ரசாயன மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் மேலும் சாக்கடை கழிவுகளின் மூலமும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மேற்கொள்வதால் அதன் மூலமும் குளத்தின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு தற்போது மீன்கள் செத்து மடிகின்றன எனவே உடனடியாக குளத்தின் நீரில் உள்ள தன்மையை ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு மருந்துகள் தெளித்து மீண்டும் மீன்கள் இயற்கை சூழலில் வளரும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்