Reporter - குருபிரசாத்
கோவையில் `டிரான்ஸ் கிச்சன்’ என்ற பெயரில் ஹோட்டல் நடத்திவந்த திருங்கை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருங்கைகள் என்றாலே சாலையில் பிச்சையெடுப்பார்கள், பாலியல் தொழில்களில் ஈடுபடுவார்கள் என்ற பார்வை படிப்படியாக ஒழிந்துவருகிறது. பல்வேறு துறைகளில் திருநங்கைகள் தடம்பதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் சங்கீதா. கோவைச் சுற்றுவட்டாரங்களில் திருநங்கைகள் கேட்டரிங் தொழில்களில் ஈடுபடுவது வழக்கம்.