சீனாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமாகி 70 நாள்கள் ஆன பலருக்கு மீண்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஒரு இறைச்சி சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் பரவியதாகக் கூறப்பட்டது. ஆனால், வைரஸ் எங்கிருந்து உருவானது என்பது தொடர்பாகவே பல கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பப்பட்டு... சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையாகி வருகிறது. டிசம்பர் மாதம் இறுதியில் உருவான இந்த வைரஸ், உலகம் முழுவதும் பரவி, சுமார் 26 லட்சம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி 1,87,000-க்கும் அதிகமானவர்களைப் பலிகொண்டுள்ளது.
CREDITS - சத்யா கோபாலன்
#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India